Saturday, February 13, 2010

பைன் காடு கொடைக்கானல்

Friday, January 22, 2010

சாசனம்




நெஞ்சினிலே நினைத்து விட்டேன்,

நினைவெல்லாம் நீயே என்று!

நேசமுடன் வளர்ந்து விட்டேன்,

பாசமெல்லாம் நீயே என்று!


பார்வை வேண்டும் தருவாயா,

பாவை உன்னை காண்பதற்கு!

பறவையாக மாற்றி விடு - எனையுன்

படுக்கை அறையில் மாட்டி விடு!


இச்சை உன் மீது கொண்ட

பச்சிளம் பாலகன் நான்,

சர்ச்சை வேண்டாம் கண்ணே!

சாசனம் எழுதிக் கொடு!